வேலைவாய்ப்பு

ரெப்கோ வங்கியில் வேலை!

Published

on

ரெப்கோ வங்கியில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 40. இதில் இளநிலை உதவியாளர் மற்றும் கிளார்க் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: இளநிலை உதவியாளர் மற்றும் கிளார்க் (Junior Assistant/Clerk)

மொத்த காலியிடங்கள்: 40

மாத சம்பளம்: ரூ.11,765 – 31,540

வயது: 21 முதல் 28க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: பொது மற்றும் இதர பிரிவினருக்கு ரூ.700. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ரூ.400 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கி கார்டு மற்றும் ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.repcobank.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு மையம்: சென்னை, கோயமுத்தூர், மதுரை, திருச்சி, சேலம் மற்றும் திருநெல்வேலி

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.repcobank.com/uploads/career/6.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.06.2019

seithichurul

Trending

Exit mobile version