வேலைவாய்ப்பு

எஸ்.ஐ.சி-ல் வேலை!

Published

on

அனைவராலும் எல்ஐசி என அழைக்கப்படும் லைப் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 590 உதவி நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 590

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. AAO (Generalist) – 350
2. AAO (IT) – 150
3. AAO (CA) – 50
4. AAO (Actuarial) – 30
5. AAO (Rajbhasha) – 10

கல்வித்தகுதி: பட்டதாரிகள், பொறியியல் துறையில் கணினி அறிவியல், ஐடி, எல்க்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவுகளில் பி.இ முடித்தவர்கள், எம்சிஏ, கணினி அறிவியல் பிரிவில் எம்.எஸ்சி., சிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். ஆக்சுவரியல் தேர்வுகளில் சிடி1 முதல் சிடி5 வரைவுள்ள தாள்களையும், குறைந்தபட்சம் 4 தாள்களையும் முடித்தவர்கள் ஆக்சுவரியல் பணிக்கு விண்ணப்பிக்கலாம். ராஜ்பாஷா அதிகாரி பணிக்கு இந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 01.03.2019 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மாதம் சம்பளம்: ரூ.32795- 1610(14) –55335– 1745(4) –62315 + இதர சலுகைகள்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இருகட்ட எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவப் பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600 கட்டணமாகச் செலுத்த வேண்டும் எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.licindia.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள https://www.licindia.in/getattachment/59fa2d3e-40ad-4c4b-916d-95a58ee64123/Recruitment-of-Assistant-Administrative-Officer-20 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.03.2019

Trending

Exit mobile version