வேலைவாய்ப்பு

மைசூருல் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் ஓட்டுநர் வேலை!

Published

on

மைசூருல் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 03. ஓட்டுநர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: Driver-Cum-Pump Operator-Cum-Fireman/A

மொத்த காலியிடங்கள்: 03

மாத சம்பளம்: 21,700

வயது: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: அறிவியலை ஒரு பாடமாகக் கொண்டு பிளஸ் டூ தேர்ச்சியுடன் Fire Fighting Equipments-ல் சான்றிதழ் படிப்பை முடித்துக் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று ஒரு ஆண்டுப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: உடற்திறன் தகுதித் தேர்வு, ஓட்டுநர் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.barc.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்திச் செய்து அதனுடன் சுயசான்று செய்யப்பட்ட சான்றிதழ் நகல்களை இணைத்துக் கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Administrative Officer-III, Bhabha Atomic Research Centre, P.B.No.1, Yelwal, Mysuru – 571 130

Trending

Exit mobile version