சினிமா செய்திகள்

ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் மரணம்

Published

on

நடிகரும் முன்னாள் திமுக எம்.பி.யுமான ஜே.கே. ரித்திஷ் மாரடைப்பால் இன்று காலமானார்.

இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்த ரித்திஷ், அங்கிருந்து சிறுவயதிலேயே ராமேஷ்வரத்திற்கு புலம் பெயர்ந்தார். நாயகன் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான ஜே.கே. ரித்திஷ், கடைசியாக ஆர்.ஜே. பாலாஜி ஹீரோவாக நடித்த எல்.கே.ஜி படத்தில் ராமராஜ் பாண்டியன் எனும் வெயிட்டான ரோலில் நடித்திருந்தார்.

மாரடைப்பால் இன்று காலமாகியுள்ள ரித்திஷுக்கு 46 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரித்திஷ் மாரடைப்பால் இன்று காலமானார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

திமுகவின் முன்னாள் எம்.பியாக இருந்த ரித்திஷ், 2014-ல் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் கட்சியினர் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version