சினிமா செய்திகள்

’சேர்க்கை சரியில்லை…’- பிக்பாஸ் ஜித்தன் ரமேஷ் வெளியிட்ட புது வீடியோ!

Published

on

பிக்பாஸ் புகழ் ஜித்தன் ரமேஷ் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்திருந்தார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 மூலம் புகழ் பெற்ற ஜித்தன் ரமேஷ் கடந்த வாரம் எலிமேனேட் ஆனார். பிக்பாஸ் இல்லத்தைவிட்டு வெளியே வந்ததிலிருந்து தொடர்ந்து ரசிகர்களுடன் இணக்கமாக தொடர் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதுபோல், ஜித்தன் ரமேஷ் தனது பங்களிப்பு குறித்து ரசிகர்கள் கருத்துத் தெரிவிக்கலாம் என முன்னர் வீடியோ வெளியிட்டிருந்தார்.

அதற்கு ரசிகர்கள் அளித்த பதில்களை, கருத்துகளை, அறிவுரைகளை ஏற்றுக்கொள்வதாகத் தற்போது புது வீடியோ வெளியிட்டுள்ளார். ரசிகர்களில் 95 சதவிகிதம் பேர் மிகவும் நேர்மறையான கருத்துகளைத் தெரிவித்துள்ளதாக ரமேஷ் மகிழ்வுடன் பகிர்ந்துகொண்டார். மீதி 5 சதவிகிதத்தினரும் நல்ல ஆலோசனைகளை வளங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

பலரும் ‘சேர்க்கை சரியில்லை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருந்ததாகவும் வரும் காலங்களில் தன்னை மெருகேற்றிக் கொள்வதாகவும் ஜித்தன் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version