தொழில்நுட்பம்

ZOOM-க்கு போட்டியாக ஜியோ மீட்.. ரிலையன்ஸ் ஜியோ அதிரடி!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியத் தொடங்கியுள்ளனர். எனவே நிறுவனத்தின் கூட்டங்கள் போன்றவற்றை நடத்த விடியோ கான்ஃபரன்ஸ் ஆப்களுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது.

எனவே இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ ஜியோ மீட் (JioMeet) என்ற வீடியோ கான்ஃபரன்சிங் செயலியை அறிமுகம் செய்ய உள்ளது. ஜியோ மீட் செயலியானது ZOOM Cloud Meeting, மைக்ரோசாஃப்ட் டீம்ஸ், கூகுள் ஹாங் அவுட்ஸ் போன்றவற்றுக்குப் போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

பிற விடியோ கான்ஃபரன்ஸ் சேவைகள் போன்று ஜியோ மீட் செயலி ஆண்டிராய்டு, ஐஓஎஸ் சாதனங்களில் கிடைக்கும். மேலும் ஜியோ மீட் இணையதளம் மூலமாகவும் வீடியோ கான்ஃபரன்ஸ் சேவையைப் பெற முடியும். ஆனால், விண்டோஸ் கணினிகளுக்கான செயலி குறித்த விவரங்கள் இல்லை.

ஜியோமீட் வீடியோ கான்ஃபரன்ஸ் சேவையைத் தொடங்குவதை உறுதி செய்துள்ள ஜியோ, JioMeet.com என்ற இணையதளத்தைத் தொடங்கியுள்ளது. இன்னும் பணிகள் முழுமை அடையாததால் ஜியோ மீட் சேவைக்கு விருப்பம் தெரிவித்தமைக்கு நன்றி என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே விரைவில், ரிலையன்ஸ் ஜியோ மீட் சேவை மூலமாகவும் வருவாய் ஈட்டும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

seithichurul

Trending

Exit mobile version