செய்திகள்

ஜியோ க்ரூப் டாக் என்றால் என்ன? எப்படிப் பயன்படுத்துவது? மற்றும் பல!

Published

on

ரிலையன்ஸ் ஜியோ ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களைத் தொடர்புகொண்டு பேச ஜியோ க்ரூப் டாக் என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக் போன்று ஜியோ க்ரூப் டாக்கில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் கலந்துரையாட முடியும். ஜியோ சினிமா, ஜியோ டிவி, ஜியோ சாவன், ஜியோ சாட் போன்ற செயலிகளைத் தொடர்ந்து குழுவாகப் பேச ஜியோ க்ரூப் டாக் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது சோதனை முயற்சியில் உள்ள இந்த ஜியோ க்ரூப் டாக் செயலியை ஜியோ பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். ஜியோ மொபைல் எண் உள்ள போனில் மட்டுமே இந்தச் செயலியைப் பயன்படுத்த முடியும்.

இந்தச் செயலியில் அன்மையில் பேசியவர்கள், குழு மற்றும் தொடர்புகள் என்று மூன்று டேப்கள் இருக்கும். ஜியோ அல்லாத பிற மொபைல் நெட்வொர்க் பயன்படுத்துபவர்களை ஜியோ க்ரூப் டாக் மூலம் தொடர்புகொள்ள முடியும்.

ஜியோ க்ரூப் டாக்கின் இந்தச் சொதனை ஓட்டத்தில் குரல் அழைப்புகளை மட்டுமே மேற்கொள்ள முடியும். விரைவில் குழுவாக வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்று கூறுகின்றனர். இந்தச் செயலி மூலம் குழுவாகப் பேசும் முன்பு சம்மந்தப்பட்ட நபர்களின் மொபைல் எண்ணைத் தொடர்புகளில் சேமிக்க வேண்டும் என்பது கட்டாயம்.

குழு அழைப்பு மேற்கொள்ளும் போது யாருடன் பேச வேண்டும், யாரை எப்போது இணைக்க வேண்டும், மியூட் போன்ற வசதிகளும் உள்ளது.

இந்தச் செயலியில் சேமிக்கப்படும் மொபைல் எண்ணைச் சிறு நொடி அழுத்திப்பிடித்தினால் நீக்குவதற்க்கான தெரிவும் கிடைக்கும்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version