வணிகம்

டிராய் எடுத்த அதிரடி முடிவு; அதிர்ச்சியில் ஜியோ!

Published

on

டெலிகாம் நிறுவனங்களுக்கு இடையிலான இண்டெர்கனெக்ட் யூசேஜ் கட்டணம் அடுத்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கும் என்று டிராய் தெரிவித்துள்ளது. இதனால் ரிலையன்ஸ் ஜியோ அதிர்ச்சியில் உள்ளது.

இண்டெர்கனெக்ட் யூசேஜ் கட்டணம் என்றால் என்ன?

ஒரு டெலிகாம் நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க்கிற்கு அழைக்கும் போது இண்டெர்கனெக்ட் யூசேஜ் கட்டணம் (interconnect usage charge) செலுத்த வேண்டும்.

ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் சேவை தொடங்கியதிலிருந்து இந்த கட்டணத்தை நீக்க வேண்டும் என்றும், அதற்கான கட்டணத்தைச் செலுத்த மாட்டோம் என்று கூறிவந்தது. ஆனால் தீபாவளிக்கு முன்பு தான் இந்த இண்டெர்கனெக்ட் யூசேஜ் கட்டணத்தை டிராயின் வலியுறுத்தலின் பேரில் ஜியோ பிற நெட்வொக்குகளுக்கு செலுத்தியது.

அதனைத் தொடர்ந்து ரிலையன்ஸ் நெட்வொர்க்கிலிருந்து, பிற நெட்வொர்க்குகளுக்கு அழைக்கும் போது ஒரு நிமிடத்திற்கு 6 பைசா வாடிக்கையாளர்களுக்குக் கட்டணம் விதிக்கப்பட்டது. இதனால் ஜியோ வாடிக்கையாளர்கள் அதிகளவில் பாதித்து வந்தனர்.

தற்போது இந்த கட்டணம் 2020-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை தொடரும் என்று டிராய் தெரிவித்துள்ளது. இதனால் ஜியோ வாடிக்கையாளர்கள் பிற நெட்வொர்க்குகளுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ அஞ்சுகிறது.

ஜியோவிலிருந்து ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் ஐடியாவுக்கு அதிகளவில் அவுட்கோயிங் அழைப்புகள் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version