தொழில்நுட்பம்

ஜியோ: ஆபாச வலைத்தளங்கள் முடக்கம்.! இனி வெறும் சாமி படம் மட்டும் தான்.!

Published

on

ஆபாசப் படங்கள் மற்றும் ஆபாச இணையதளங்களை அதிகம் பயன்படுத்தும் உலகநாடு பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக மலிவான விலையில் அதிக டேட்டா சேவை வழங்கப்படுவதே என்பதும் தெரியவந்துள்ளது.

மலிவான விலையில் அதிக டேட்டா சேவைக் கிடைப்பதனால், மக்கள் அதிகளவில் ஆபாசப்படங்களைப் பார்ப்பதாக, அண்மையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. இதற்கு உத்தரகண்ட் உயர் நீதி மன்றம் அதிரடி தீர்ப்பை அறிவித்திருந்தது.

அதனை தொடர்ந்து தற்பொழுது இந்தியாவில் 827 ஆபாச வலைத்தளங்கள், அரசு உத்தரவின்படி முடக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குறைந்த விலையில் அதிக டேட்டா சேவை வழங்கிய ஜியோ நிறுவனமும் தானாக முன்வந்து ஆபாச வலைத்தளங்களை முடங்கியுள்ளது. நேற்று மாலை முதல் ஜியோ பயனர்களுக்கு ஆபாச வலைத்தளங்கள் அனைத்தும் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version