இந்தியா
ஜியோ நெக்ஸ்ட் போன் ரூ.1999 தானா? ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!
![jio phone next9 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/jio-phone-next9.jpg)
கூகுள் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ இணைந்து உருவாக்கியிருக்கும் ஜியோ போன் நெக்ஸ்ட் என்ற ஸ்மார்ட்போன் வரும் தீபாவளி அன்று ரிலீசாக இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
மேலும் இந்த போனின் விலை என்னவாக இருக்கும் என பொதுமக்களின் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது இதுகுறித்த அறிவிப்பை ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ளார்.
கூகுள் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ள இந்த ஸ்மார்ட்போன் விலை ரூபாய் 6499 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த போன் 18 மற்றும் 24 பிளான்களை கொண்ட ஜியோ சிம் கார்டுடன் வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் இந்த போனை ரூபாய் 1999 முன்பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்றும் மீதி தொகையை மாதாந்திர தவணைகளில் கட்டிக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக மலிவு விலை போன் என்று அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்த போனை சில்லரை விற்பனையகம் மூலமோ அல்லது ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக அல்லது வாட்ஸ்அப் குறுந்தகவல் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையானது, சீன நிறுவனங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வரும் நிலையில், ஜியோ போன் நெக்ஸ்ட் என்ற ஸ்மார்ட்போனுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.