இந்தியா

ரூ.3499க்கு ஜியோ-நெக்ஸ்ட் 4ஜி செல்போன்: என்னென்ன சிறப்பு அம்சங்கள்?

Published

on

இந்தியாவில் தொலைத்தொடர்பு இந்நிறுவனத்தில் தனிப்பெரும் ராஜ்ஜியமே நடத்தி வருகிறது ஜியோ நிறுவனம் என்பதும் இந்த நிறுவனத்தின் வருகை காரணமாக ஏர்செல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் நஷ்டமடைந்து வெளியேறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ நிறுவனத்தின் வருகை காரணமாக தான் பட்டிதொட்டியெங்கும் இன்டர்நெட் என்பது அறிமுகம் செய்யப்பட்டு விட்டதாகவும், மிகக் குறைந்த மற்றும் இலவசமாகவே இன்டர்நெட் அள்ளி வழங்கி வரும் ஒரு நிறுவனமாக ஜியோ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்டர்நெட் மட்டுமின்றி குறைந்த விலையில் செல்போன்களையும் அவ்வப்போது ஜியோ நிறுவனம் செய்து வருகிறது. அந்த வகையில் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் ஜியோ செல்போன் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த செல்போனின் பெயர் ’ஜியோ போன் நெக்ஸ்ட்’ என பெயரிடப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த போன் சந்தைக்கு வர உள்ளது என்பதும் இந்த போனின் விலை ரூபாய் 3499 ஆக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ போன் நெக்ஸ்ட் மொபைலில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் இருக்குமென்றும் குவால்காம் QM215 SoC பிராசஸர் இருக்குமென்றும் 5.5 இன்ச் டிஸ்ப்ளே வசதி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

2 ஜிபி ரேம் மற்றும் 3ஜிபி ரேம் என இரண்டு தனித்தனி மாடல்களில் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மொபைல் போனில் 16 ஜிபி அல்லது 32 ஜிபி அளவிலான மெமரி கார்டு வசதிகளையும் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்பி கேமரா 8 மெகாபிக்சல் மற்றும் பின்புற கேமரா 13 மெகாபிக்சல் என இரண்டு கேமராக்கள் இருக்குமென்றும், ப்ளூடூத் வசதி, ஜிபிஎஸ் வசதி ஆகியோருடன் 2,500mAh பேட்டரி வசதி மற்றும் 1080பி திறன் கொண்ட வீடியோ ரெக்கார்ட் செய்யும் வசதியும் இருப்பதாக கூறப்படுகிறது.

கூகுள் நிறுவனத்துடன் கூட்டணியில் இந்த மொபைல் போன் உருவாக்கப்பட்டுள்ளதால் இந்த மொபைல் போனில் கூகுளின் முக்கிய செயலிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. 4ஜி சேவையை மிக சிறப்பாக அளிக்க உள்ள இந்த மொபைல்போன் மிகச் சிறந்த வரவேற்பை இந்திய மக்கள் மத்தியில் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version