வணிகம்

ஜியோ போன் நெக்ஸ்ட் இன்று ரிலீஸ் இல்லை.. வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!

Published

on

செப்டம்பர் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் ஜியோ போன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் என ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருந்தது.

இந்நிலையில் சிப் பற்றாக்குறை காரணமாக ஜியோ போன் நெக்ஸ்ட் ரிலீஸ் தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முன்பாக நவம்பர் மாதம் சந்தைக்கு ஜியோ போன் நெக்ஸ்ட் வரும் என கூறப்படுகிறது. இந்த கால இடைவெளியில் சர்வதேசச் சந்தையில் ஏற்பட்டுள்ள சிப் தட்டுப்பாடு குறைந்து உற்பத்தி அதிகரிக்கும் என ரிலையன்ஸ் நம்பிக்கையில் உள்ளது.

கூகுள் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த போன் சந்தைக்கு வர உள்ளது என்பதும் இந்த போனின் விலை ரூபாய் 3499 ஆக இருக்கும்.

ஜியோ போன் நெக்ஸ்ட் மொபைலில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் இருக்குமென்றும் குவால்காம் QM215 SoC பிராசஸர் இருக்குமென்றும் 5.5 இன்ச் டிஸ்ப்ளே வசதி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

2 ஜிபி ரேம் மற்றும் 3ஜிபி ரேம் என இரண்டு தனித்தனி மாடல்களில் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மொபைல் போனில் 16 ஜிபி அல்லது 32 ஜிபி அளவிலான மெமரி கார்டு வசதிகளையும் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்பி கேமரா 8 மெகாபிக்சல் மற்றும் பின்புற கேமரா 13 மெகாபிக்சல் என இரண்டு கேமராக்கள் இருக்குமென்றும், ப்ளூடூத் வசதி, ஜிபிஎஸ் வசதி ஆகியோருடன் 2,500mAh பேட்டரி வசதி மற்றும் 1080பி திறன் கொண்ட வீடியோ ரெக்கார்ட் செய்யும் வசதியும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கூகுள் நிறுவனத்துடன் கூட்டணியில் இந்த மொபைல் போன் உருவாக்கப்பட்டுள்ளதால் இந்த மொபைல் போனில் கூகுளின் முக்கிய செயலிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. 4ஜி சேவையை மிக சிறப்பாக அளிக்க உள்ள இந்த மொபைல்போன் மிகச் சிறந்த வரவேற்பை இந்திய மக்கள் மத்தியில் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version