இந்தியா

தயார் நிலையில் ஜியோ 5ஜி ஸ்மார்ட்போன்.. என்னென்ன சிறப்பு அம்சங்கள்? விலை என்ன?

Published

on

இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ சமீபத்தில் 5ஜி சேவையை ஆரம்பித்தது என்பதும், ஒரு சில குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் தற்போது 5ஜி சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் 5ஜி சேவையை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்தியாவில் தற்போது 5ஜி ஸ்மார்ட் போன்கள் குறைவான அளவே உள்ள நிலையில் ஜியோ நிறுவனம் 5ஜி ஸ்மார்ட் போன்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் இந்த போன் அறிமுகம் செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி ஜியோ 5ஜி ஸ்மார்ட்போன் தயார் நிலையில் இருப்பதாகவும் இந்த போன் இந்திய தரநிலை (BIS) சான்றிதழ் பெற்று விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இந்த போன் அடுத்த ஆண்டு ரிலையன்ஸ் வருடாந்த பொதுக் கூட்டத்தின் போது அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கூகுள் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் ஜியோ நிறுவனம் 5ஜி ஸ்மார்ட்போன்களை தயாரிக்க போவதாக அறிவித்தது. இந்த நிலையில் தற்போது அந்த போன் முன்னணி இணையதளம் ஒன்றில் Jio LS1654QB5 என்ற மாடல் எண்ணுடன் பட்டியலிடப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன இருக்கும் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

4ஜிபி ரேம் , ஸ்னாப்டிராகன் 480+ SoC சிப் மற்றும் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அம்சத்தில் இந்த போன் தயாரிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த 5ஜி ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் HD+ LCD 90Hz திரை, 5,000mAh பேட்டரி மற்றும் 13 மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் வரும் என்றும், 8 மெகாபிக்சல் செல்பி கேமிரா இருக்கக்கூடும் என்றும் தகவகள் கசிந்துள்ளது.

இந்த 5ஜி ஸ்மார்ட்போனின் விலை தெரியவில்லை என்றாலும், மற்ற 5ஜி போன்களை விட மலிவு விலையில் இருக்கும் என்றும் தோராயமாக இதன் விலை ரூ.8,000 முதல் ரூ.10,000 வரை இருக்கலாம் அல்லது ரூ.15,000க்கு குறைவான விலை வரம்பில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version