தொழில்நுட்பம்

ஜியோ வாடிக்கையாளர்களே.. இதத் தானே எதிர்பார்த்தீங்க!

Published

on

ஜியோவில் இதுவரையில் 11 ரூபாய்க்கு 800 எம்பி டேட்டா வழங்கப்பட்ட நிலையில், தற்போது 1ஜிபி ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஜியோவில் 4ஜி டேட்டா ரீசார்ஜில் குறைந்தப்பட்சமாக 11 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. வழக்கமாக 21 ரூபாய்க்கு 2ஜபி டேட்டாவும், 51 ரூபாய்க்கு 6ஜிபி டேட்டாவும் வழங்கப்படும். ஆனால், 11 ரூபாய் ரீசார்ஜில் மட்டும் 1ஜிபி வழங்கப்படாமல் 800 எம்பி டேட்டாவே வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தற்போது ஜியோ நிறுவனம் 800 எம்பி டேட்டாவை 1ஜிபி ஆக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் இனி டேட்டா தீர்ந்து விட்டால் வெறும் 11 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து 1ஜிபி டேட்டா பெறலாம். ஏற்கெனவே உள்ள பிளானின் வேலிடிட்டி திட்டத்தின்படியே 11 ரூபாய் டேட்டா வேலிடிட்டியும் அமைகிறது.

இதுதவிர்த்து 21, 51,101 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், வீதம் 2ஜிபி, 6ஜிபி, 12ஜிபி என்ற வகையில் டேட்டா கிடைக்கிறது. வீட்டிலிருந்தபடியே வேலை செய்பவர்களுக்கு ஏதுவாக 151, 201, 251 ரூபாய் டேட்டா பிளான்களும் உள்ளன. இவை வீதம் 30ஜிபி, 40ஜிபி, 50ஜபி என டேட்டா கிடைக்கிறது. இது பற்றிய முழுமையான விவரங்கள் ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version