இந்தியா

ஒரு ரூபாய்க்கு இண்டர்நெட் டேட்டா: உலகிலேயே குறைவான விலைக்கு தரும் ஜியோ!

Published

on

உலகிலேயே மிகவும் குறைவான விலைக்கு இன்டர்நெட் டேட்டா தரும் நிறுவனமாக ஜியோ தன்னை அறிவித்துக் கொண்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ நிறுவனம் அவ்வப்போது பல அதிரடி சலுகைகளை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

சமீபத்தில் ஜியோ தனது பிரிபெய்டு வாடிக்கையாளர்களின் கட்டணத்தை உயர்த்திய போதிலும் ஜியோ நிறுவனம் தான் இப்போதைக்கு குறைவான கட்டணத்தில் இன்டர்நெட் டேட்டாக்களை தருகிறது.

இந்த நிலையில் அதிரடியாக ஜியோவின் புதிய அறிவிப்பில் ஒரு ரூபாய்க்கு 100 எம்பி டேட்டா என்று அறிவித்துள்ளது. உலகிலேயே மிகவும் குறைவான விலைக்கு இண்டர்நெட் டேட்டா அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ உள்ளதாக இதன் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

30 நாட்கள் வேலிடிட்டி எனவும் டேட்டா தீர்ந்துவிட்டால் ஒரு ஜிபி டேட்டா பத்து ரூபாய்க்கு டாப் அப் செய்து செய்து கொள்ளலாம் என்றும் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஜியோ வாடிக்கையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version