இந்தியா

630 ஜிபி டேட்டா.. வரம்பற்ற அழைப்புகள்: ஜியோவின் ஹேப்பி நியூ இயர் பிளான்!

Published

on

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ 2023ம் ஆண்டு புத்தாண்டை அடுத்து தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய ரீசார்ஜ் பிளான் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி தினமும் 2.5 ஜிபி டேட்டா என மொத்தம் 252 நாட்களுக்கு மொத்தம் 630 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற இன்கமிங் அழைப்பு வழங்குவதாகவும் அறிவித்து உள்ளது. இந்த பிளான் குறித்த முழு தகவல்கள் தற்போது பார்ப்போம்

ரூ.2023 திட்டம்: இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தினமும் 2.5ஜிபி டேட்டா என 252 நாட்களுக்கு மொத்தம் 630ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். மேலும் தினமும் 100 மெசேஜ் மற்றும் வரம்பற்ற அழைப்புகளையும் வழங்குகிறது. அதுமட்டுமின்ரி புதிய வாடிக்கையாளர்களுக்கு அமேசான் பிரைம் உறுப்பினர் உட்பட ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச திட்டங்களையும் வழங்குகிறது.

ரூ.2,999 திட்டம்: இந்த திட்டத்தின்படி முன்பைவிட கூடுதலாக 75 ஜிபி டேட்டா மற்றும் 23 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி நாட்கள் கிடைக்கும். இந்த திட்டத்தில் மொத்தம் 912.5ஜிபி டேட்டா கிடைக்கும் என்றும் அதாவது 365 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2.5ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் தினமும் 100 எஸ்.எம்.எஸ் மற்றும் அனைத்து ஜியோ பயன்பாடுகளும் கிடைக்கும்.

ரூ 2,545 திட்டம்: இந்த திட்டத்தில் பயனர்கள் 504ஜிபி டேட்டா பெறலாம். அதாவது ஒரு நாளைக்கு 1.5ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 மெசேஜ்கள் என 336 நாட்களுக்கு கிடைக்கும்.

ரூ.2,874 திட்டம்: இந்த திட்டத்தில் பயனர்கள் வரம்பற்ற அழைப்பு, தினமும் 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ் மற்றும் 2365 வேலிடிட்டி பெறலாம். மேலும் அனைத்து ஜியோவின் உள் பயன்பாடுகளுக்கும் இலவச அணுகலைப் பெறுவார்கள்.

seithichurul

Trending

Exit mobile version