இந்தியா

5ஜி டேட்டா பிளான் எவ்வளவு? விலையை அறிவித்த ஜியோ

Published

on

இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இதுவரை 4ஜி தொழில்நுட்பத்திற்கான கட்டணத்தை பெற்று வந்தது என்பது தெரிந்தது. இந்த நிலையில் இந்தியாவில் ஏர்டெல், வோடபோன் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் 5ஜி தொழில்நுட்பத்தை தங்களது வாடிக்கையாளர்களுக்கு அளித்து வரும் நிலையில் ஜியோ நிறுவனம் முதல் முறையாக தனது 5ஜி தொழில்நுட்பதற்கான டேட்டா பிளானை அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 5ஜி டேட்டாவ்க்கு ரூ.61 என்ற் திட்டத்தை அறிவித்துள்ளது. ரூ.61 ஜியோ திட்டம் என்பது பயனர்கள் தங்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களில் ஜியோ சிம் மூலம் 5ஜி டேட்டாவை அனுபவிக்க உதவும் திட்டமாஉம். இந்தத் திட்டம் Jio.com மற்றும் My Jio செயலியில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

My Jio செயலிக்கு சென்று புதிய “5G மேம்படுத்தல்” பிரிவை தேர்வு செய்து ரூ.61 டேட்டா திட்டத்தை பயனர்கள் தங்கள் ஜியோ எண்ணிற்கு ரீசார்ஜ் செய்வதன் மூலம், பயனர்கள் தங்கள் மொபைலில் 5ஜி வேக டேட்டாவை பெறுவார்கள்.

ரூ.61 ஜியோ 5ஜி டேட்டா திட்டத்தில் 6 ஜிபி மொத்த மொபைல் டேட்டா வழங்கப்படும்.
இந்தத் திட்டம் ₹119, ₹149, ₹179, ₹199 மற்றும் ₹209 ஆகிய பிளான்களுக்கும் பொருந்தும்.

ரிலையன்ஸ் ஜியோ தற்போது ஜெய்ப்பூர், ஜோத்பூர், உதய்பூர் ஆகிய இடங்களில் 5ஜி இணைய சேவையை வழங்கி வரும் நிலையில் விரைவில் இந்தியா முழுவதும் 5ஜி சேவையை வழங்கவுள்ளது.

மற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது ஜியோ ட்ரூ 5ஜி குடுதல் நன்மைகளை பயனர்களுக்கு வழங்குகிறது. அதாவது 700 மெகா ஹெர்ட்ஸ் லோ-பேண்ட் ஸ்பெக்ட்ரம் கொண்ட ஒரே ஆபரேட்டர் ஜியோ மட்டுமே என்பதால் உண்மையான 5ஜி அனுபவத்தை பயனர்கள் பெறலாம்.

Trending

Exit mobile version