இந்தியா

சர்கார் பற்றி பேச முடிகிறது.. ராஜலட்சுமி பற்றி பேச நேரமில்லை.. ஜிக்னேஷ் மேவானி பொளேர்

Published

on

கோவை: சர்கார் படத்திற்கு எதிராக போராடிய அரசுக்கு சேலம் மாணவி ராஜலட்சுமி குறித்து பேச நேரம் இல்லையா என்று குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவையில் நடந்த விழாவில் கலந்து கொண்ட குஜராத் சுயேட்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அந்த விழாவில் அவருக்கு சமூக நீதிக்கட்சி சார்பில் பெரியார் விருது வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் சேலம் மாணவி ராஜலட்சுமி குறித்து பேசினார்.

சேலம் சிறுமி ராஜலட்சுமி கொடுமையாக கொலை செய்யப்பட்டு இருக்கிறார். ஜாதி காரணமாக அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விலங்குகள் இறந்தால், மாடு, நாய் இறந்தால் டிவிட் செய்யும் மோடி இதை பற்றி வாயை திறக்கவில்லை.

தமிழக அரசு தீண்டாமை வன்கொடுமை சட்டத்தை பயன்படுத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.அதையெல்லாம் செய்யாமல் தமிழக அரசு சர்கார் குறித்து பேசி வருகிறது. சர்காருக்கு எதிராக போராடிய கட்சியினர், ராஜலட்சுமி குறித்து பேச மறுக்கிறார்கள்.

தமிழக அரசே மோடி ஆலோசனையின் பெயரில்தான் இயங்கி வருகிறது. பாஜக தலைவர் அமித் ஷாதான் தமிழக அரசை கட்டுப்படுத்துகிறார்.

 

 

 

seithichurul

Trending

Exit mobile version