சினிமா செய்திகள்

ஜப்பான் ஒசாகா திரைப்பட விழாவுக்குத் தேர்வான ‘ஜீவி’ திரைப்படம்!

Published

on

ஜப்பானில் நடைபெறும் ஒசாகா திரைப்பட விழாவுக்கு தமிழ் திரைப்படமான ‘ஜீவி’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

8 தோட்டாக்கள் திரைப்படம் மூலம் புகழ் பெற்ற நடிகர் வெற்றியின் இரண்டாவது படமான ஜீவி திரைப்படமும் மிகப்பெரிய அதிர்வை சினிமா ரசிகர்கள் மத்தியில் எழுப்பியது. விமர்சனங்கள் ரீதியாக மாபெரும் வெற்றியை இந்தத் திரைப்படம் பெற்றது.

விஜே கோபிநாத் இயக்கிய இந்தத் திரைப்படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது. தற்போது இந்தப் படம் ஒசாகா திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் விமர்சன ரீதியாக வென்ற சிறந்த படங்களுக்கான நாமினேஷன் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வருகிற ஜனவரி 16-ம் தேதி 2021 அன்று ஒசாகா திரைப்பட விழாவில் இந்தத் திரைப்படம் திரையிடப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version