சினிமா செய்திகள்

கோமாளி 5வது லுக் ரிலீஸ்!

Published

on

அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் கோமாளி படத்தின் 5வது லுக்கை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

கடந்த 4 நாட்களாக படத்தின் ஒவ்வொரு லுக்கையும் படக்குழு ஒரு சிறப்பு விருந்தினரை வைத்து ரிலீஸ் செய்து வந்தது. இன்றைய லுக்கை இசையமைப்பாளர் டி.இமான் வெளியிட்டுள்ளார்.

ஜெயம் ரவி 9 கெட்டப்பில் கோமாளி படத்தில் நடித்துள்ளதால், அவரது 9 கெட்டப் லுக்குகளையும் படக்குழு ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது.

கோமாளி படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். நேற்று போராளி லுக்கை வெளியிட்ட படக்குழு இன்று அந்தபுரத்தில் மங்கைகள் சூழ் மகாராஜாவாக உல்லாசமாக ஜெயம் ரவி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version