சினிமா செய்திகள்

ஆரவுக்கு அடித்த ஜாக்பாட்.. இந்திய சினிமாவே எதிர்பார்த்துக் காத்திருக்கும் படத்தில் வாய்ப்பு!

Published

on

ஆரவ் என்ற உடன் பிக்பாஸ் ஆரவு என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ரவிக்கு தான் அந்த இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஜெயம் ரவி மற்றும் அவரது மகன் ஆரவ் நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது. ஜெயம் ரவியின் மகன் ஆரவின் நடிப்பும் பாராட்டுக்களைப் பெற்று இருந்தது.

இந்நிலையில் இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருக்கும் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி மட்டுமல்லாமல் அவரது மகன் ஆரவும் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

seithichurul

Trending

Exit mobile version