தமிழ்நாடு

கூட்டுறவு நகைக்கடன்களை உடனடியாக வசூலுக்க உத்தரவிட்ட தமிழக அரசு!

Published

on

5 சவரன்களுக்கு மேல் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றவர்களிடம் இருந்து கடனை வசூலிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி ஏற்பட்டதிலிருந்து பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஐந்து சவரன்களுக்கு உட்பட்ட கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் ஒரு சில நிபந்தனைகளுடன் அந்த கடன்கள் தள்ளுபடி செய்வதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஐந்து சவரன் நகைகளை வைத்து கடன் வாங்கி அனைவருக்கும் தள்ளுபடி சலுகை கிடைக்காது என்றாலும் உண்மையாகவே வறுமையின் காரணமாக கடன் வாங்கியவர்களுக்கு சலுகை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தங்களுடைய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கிய பலர் திருப்பி கட்டாமல் உள்ளனர் என்பதும் குறிப்பாக வட்டி கூட கட்டாமல் உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 5 சவரன் வைத்து கடன் வாங்கியவர்கள் மட்டுமன்றி ஐந்து சவரன்களுக்கு மேல் வைத்து கடன் வாங்கி வரும் கடன்களைத் திருப்பிக் கட்டவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஐந்து சவரனுக்கு மேல் கூட்டுறவு நிறுவனங்களில் பெற்ற கடன்களை வசூலிக்க அனைத்து கூட்டுறவு மண்டல மேலாளர் இயக்குனர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. நகை கடன் தவணை தவறி இருப்பின் சட்டபூர்வ நடவடிக்கைகளை பின்பற்றி கடன் தொகையை வசூலிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version