வணிகம்

தொடர்ந்து 2வது காலாண்டாக நட்டத்தைப் பதிவு செய்த ஜெட் ஏர்வேஸ்!

Published

on

இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டு அறிக்கையினைத் திங்கட்கிழமை தக்கல் செய்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ஜெட் ஏர்வேஸ் 1,323 கோடி ரூபாய் நிகர நட்டம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது காலாண்டாகப் பதிவு செய்யும் நிகர நட்டம் ஆகும். சென்ற காலாண்டுடன் ஒப்பிடும் போது 27.7 சதவீதம் வரை நிகர நட்டத்தினை ஜெட் ஏர்வேஸ் பெற்றுள்ளது. இதுவே ஜூன் – மார்ச் காலாண்டில் 1,036 கோடி ரூபாய் நட்டம் அடைந்து இருந்தது.

2018-2019 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 6,010 கோடி ரூபாய் வருவாயினைப் பதிவு செய்துள்ளது. இதுவே சென்ற வருடம் 5,648.87 கோடி ரூபாய் வருவாயினைப் பெற்று இருந்தது.

அதே நேரம் ஜெட் ஏர்வேஸ்க்கு முதல் காலாண்டில் விமான எரிபொருள் உயர்வால் 2,332 கோடி ரூபாய் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் காலாண்டு அறிக்கை முடிவைத் தள்ளி வைத்த நிலையில் சரிந்த பங்குகள் இன்று அறிவிப்பு வெளியாக இருந்ததால் 2.3 சதவீதம் உயர்ந்தது.

seithichurul

Trending

Exit mobile version