சினிமா செய்திகள்

ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தில் இணைந்த் இன்னொரு பிரபல நடிகர்!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க இருந்த நிலையில் திடீரென மேலும் சில நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக வந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் இன்னொரு பிரபல நடிகரும் இணைந்துள்ள தகவல் வெளிவந்துள்ளது. தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரும் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருபவருமான ஜெகபதி பாபு ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் இணைந்து உள்ளார். இவருக்கு ‘அண்ணாத்த’ படத்தில் முக்கிய வேடத்தை இயக்குனர் சிறுத்தை சிவா கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் ஏற்கனவே பல நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது ஜெகபதிபாபும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் ஏற்கனவே தீபாவளி அன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டி இமான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக குஷ்பு மற்றும் மீனா ஆகிய இருவரும் நடித்து வருகின்றனர் என்பதும் மேலும் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version