இந்தியா

விவசாயிகள் மீது காரை ஏற்றிய சம்பவம் – நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ….

Published

on

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கீம்பூர் மாவட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ரா டேனி சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்தார். மேலும், துணை முதல்வர் கேசவ பிரசாத் மௌரியாவும் அங்கு வர இருந்தார். இதையடுத்து, உள்ளூர் விவசாயிகள் ஒன்றிய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டம் நடத்தினர். எனவே, துணை முதல்வர் நிகழ்ச்சிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இதனால் பாஜகவின் கோபமடைந்தனர். அப்போது அமைச்சர் அஜய் மிஸ்ரா டேனியின் மகன் வந்த கார் விவசாயிகளின் மீது வேகமாக மோதியது. இதில் 3 விவசாயிகள் மரணமடைந்தனர். ஆனால், மொத்தம் 8 விவசாயிகல் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த விவசாயிகள் அவரின் காருக்கு தீ வைத்தனர். ஆனால், என் மகன் அந்த காரில் இல்லை என அமைச்சர் அஜய் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

பாஜக அரசு விவசாயிகளை எதிரியாக பார்ப்பதற்கு இதுவே உதாரணம் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. ராகுல் காந்தியும் இதை கடுமையாக விமர்சித்துள்ளர்.

இந்நிலையில், விவசாயிகள் மீது கார் ஏறிய வீடியோ வெளியாகி நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நின்று கொண்டிருக்கும் விவசாயிகள் மீது பின்புறமாக அவர் அந்த ஜீப் அவர்கள் மீது வேகமாக மோதி செல்லும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது.

 

 

 

 

 

 

seithichurul

Trending

Exit mobile version