இந்தியா

ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு: 18 மாணவர்கள் முதலிடம்!

Published

on

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ள நிலையில் இந்த தேர்வின் முடிவுகளை மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக ஜேஇஇ மெயின் தேர்வு மற்றும் அட்வான்ஸ் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மெயின் தேர்வு முடிவுகளை நேற்று நள்ளிரவு தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் இந்த முடிவுகளை பார்த்துக்கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்வை மொத்தம் 9,34,602 பேர்கள் எழுதி உள்ள நிலையில் இவர்களில் 18 மாணவர்கள் அகில இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளனர். மேலும் இந்த தேர்வு எழுதியவர்களில் நாற்பத்தி நான்கு பேர் 100% மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர், தெலங்கானா மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தலா இரண்டு பேர் என மொத்தம் 18 பேர் முதலிடத்தைப் பெற்றுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மெயின் தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம். jeemain.nta.nic.in என்ற இணையதளம் சென்று அதில் சீசன் 4 ரிசல்ட் என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்., அந்த லிங்கை கிளிக் செய்தால் புதிய பக்கம் ஒன்று ஓபன் ஆகும். அதில் தேர்வு மையம், விண்ணப்பம் எண், பிறந்த தேதி மற்றும் செக்யூரிட்டி பின் ஆகிவற்றை பதிவு செய்ய வேண்டும். இவற்றை பதிவு செய்தவுடன் சப்மிட் பட்டனை அழுத்தவேண்டும். இதில் ஜே.இ.இ. செசன் 4 ரிசல்ட்டை காணலாம். மேலும் தேர்வு வினாத்தாளின் விடைகளை தெரிந்து கொள்ள https://jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் கிளிக் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வு அக்டோபர் 3ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த அட்வான்ஸ் தேர்வு எழுதுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version