இந்தியா

ஜே.ஈ.ஈ. தேர்வு தேதி மற்றும் விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு!

Published

on

ஜே.ஈ.ஈ. மெயின் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் விண்ணப்பிக்கும் கடைசி தேதி குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி, ஐ.ஐ.டி, ஐஐஐடி ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.ஈ.ஈ. தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜே.ஈ.ஈ. தேர்வு குறித்த அறிவிப்பை தேசிய தேர்வு முகமை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இதன்படி ஏப்ரல் 16 முதல் 21ஆம் தேதி முதல் கட்ட தேர்வும், மே 24 முதல் 29 வரை இரண்டாம் கட்ட தேர்வும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்ட தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி மார்ச் 31 ன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒரியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்பட இருப்பதாகவும் இந்த தேர்வு குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version