சினிமா செய்திகள்

யோகிபாபுவுட ரன்னிங் ரேஸ்.. ஜெயிப்பாரா நயன்தாரா?

Published

on

கோலமாவு கோகிலா படத்தில் சிவகார்த்திகேயனின் ரொமாண்டிக் வரிகளில் உருவான எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சிடி பாடலில் நயனுடன் ரொமான்ஸ் செய்த நடிகர் யோகிபாபு. நயன்தாராவின் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ஐரா படத்திலும் ரொமான்ஸ் செய்கிறாரா? இல்லை ரேஸ் செய்கிறாரா? என்ற குழப்பத்துடன் கூடிய ஒரு புகைப்படத்தை ஐரா படக்குழு ரிலீஸ் செய்துள்ளது.

லக்‌ஷ்மி எனும் சர்ச்சைக்குரிய குறும்படத்தை எடுத்து பிரபலமான இயக்குநர் சர்ஜுன், சத்யராஜ், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் என்ற படத்தை இயக்கினார். ஆனால், அது தோல்விப் படமாக மாறியது.

இந்நிலையில், நயன்தாராவை முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்க வைத்து ஐரா படத்தை சர்ஜுன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள இரு பாடல்கள் வெளியாகி ஹிட்டாகி உள்ள நிலையில், தற்போது யோகிபாபு, நயன்தாரா ஜாகிங் செல்வது போன்ற ஒரு புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

Trending

Exit mobile version