சினிமா செய்திகள்

ஜெயம் ரவி 25வது படத்தில் பாலிவுட் நாயகி!

Published

on

ஜெயம் ரவியின் 24வது படமான கோமாளி படம் விரைவில் ரிலீசாகவுள்ளது. அந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் படு தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், விரைவில் தொடங்கவுள்ள ஜெயம் ரவியின் 25வது படம் குறித்த அப்டேட்ஸ்கள் கிடைத்துள்ளன.

மிஸ்டர் ரோமியோ, போகன் படங்களை இயக்கிய ஜெயம் ரவியின் ஃபேவரைட் இயக்குநர் லட்சுமணன் இயக்கத்தில் உருவாகவுள்ள ஜெயம்ரவி 25 படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நிதி அகர்வால் ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும், அடங்கமறு படத்தில் தனது மகன் கெவினுடன் பணியாற்றிய ஸ்டண்ட் இயக்குநர் சிவா காம்போ, இந்த படத்திற்கும் ஸ்டண்ட் பணிகளை மேற்கொள்கிறது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி, அருள்மொழிவர்மனாக நடிக்கவுள்ளார் என்ற செய்திகள் செய்திகளாகவே இருந்து வரும் நிலையில், அடுத்தடுத்த படங்களில் ஜெயம் ரவி பிசியாகி வருகிறார். இதனால், மணிரத்னம் படத்தில் அவர் நடிப்பது கேள்விக்குறியாகி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version