தமிழ்நாடு

ஸ்டாலினுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்ப தினகரன் கோரிக்கை!

Published

on

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் இடையே கடந்த சில தினங்களாக கடுமையான வார்த்தைப்போர் நடந்து வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறியுள்ள மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.

இதற்கு நேற்று அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளார். தர்மபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலை கண்டு பயந்து ஒதுங்கும் கட்சி திமுக. தனது தந்தை தொகுதியிலேயே ஓடிஒளியும் ஸ்டாலின், ஜெயலலிதா மரண மர்மத்திற்கு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக சொல்வது நகைப்புக்குரியதாக உள்ளது என்றார்.

மேலும் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாகக் கூறும் ஸ்டாலினுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அளித்து விசாரணைக்கு அழைக்க வேண்டும். தேர்தலுக்கு தேர்தல் ஸ்டாலின் இவ்வாறு கூறுகிறார். ஜெயலலிதா மீது வழக்கு தொடுத்து, இறந்தபிறகும் அவருக்கு களங்கத்தை ஏற்படுத்தியது திமுகதான். ஜெயலலிதா உடலை எடுத்து சோதனை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வாறு கூறுகிறார் என விமர்சித்தார் டிடிவி தினகரன்.

Trending

Exit mobile version