தமிழ்நாடு

ஜெயலலிதா சிகிச்சை சிசிடிவி காட்சி: விசாரணை ஆணையம் அதிரடி உத்தரவு!

Published

on

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள பல்வேறு மர்மங்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையம் பல்வேறு நபர்களுக்கு சம்மன் அளித்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரணைக்கு அப்பல்லோ மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் சரியாக ஆஜராவதில்லை என்று கண்டனம் தெரிவித்த ஆறுமுகசாமி ஆணையம், சம்மன் அனுப்பப்படுபவர்கள் உரிய நேரத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்தார்.

அதன்படி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுப்பையா விசாரணை ஆணையத்தின் முன் ஆஜரானார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது பல்வேறு கேள்விகளை நீதிபதி ஆறுமுகசாமி முன் வைத்தார். அப்போது ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, குறிப்பிட்ட பகுதிக்கான சிசிடிவி கட்சிகள் தொடர்பாக கேள்வி எழுப்பினார் ஆறுமுகசாமி.

இதனையடுத்து மருத்துவமனையில் பதிவான மொத்த சிசிடிவி காட்சிகளையும் ஏழு நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆறுமுகசாமி அதிரடியாக உத்தரவிட்டார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version