தமிழ்நாடு

ஜெயலலிதாவின் தற்போதைய சொத்து மதிப்பு எவ்வளவு: வருமான வரித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published

on

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தற்போதைய சொத்து மதிப்பு எவ்வளவு என மதிப்பீடு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

கே.கே.நகரை சேர்ந்த அதிமுக நிர்வாகி புகழேந்தி என்பவர், ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்கத் தனி நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில் வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்றுவதற்கு ஆட்சேபனை தெரிவித்தும் அவரது சொத்துகளை நிர்வகிக்க தங்களை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டியும் தீபக், தீபா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு கடந்த ஜூலை 8-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அவசியம் ஏன்? என்று கேள்வி எழுப்பி வழக்கை ஒத்திவைத்திருந்தனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க தீபக், தீபா உரிமை கோர முடியாது என்று வாதிடப்பட்டது.

இதனையடுத்து ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்க தீபா, தீபக் ஆகியோர் உரிமை கோர முடியாது என்றால் மக்களுக்குக் கொடுப்பது தான் மனுதாரரின் விருப்பமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஜெயலலிதா சொத்துகளின் தற்போதைய மதிப்பு எவ்வளவு என்று அதனை மதிப்பீடு செய்து ஆகஸ்ட் 5-ஆம் தேதி அன்று அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உத்தரவு பிறப்பித்தனர் நீதிபதிகள். மேலும் வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்றும் பணி எந்த நிலையில் உள்ளது என்று அரசுத் தரப்பிடம் கேள்வி எழுப்பி வழக்கை ஒத்திவைத்தனர்.

seithichurul

Trending

Exit mobile version