செய்திகள்

“மக்களால் நான்… மக்களுக்காக நான்” – ஜெயலலிதா நினைவிடம் திறப்பு…

Published

on

சென்னை மெரினாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நினைவிட திறப்பு விழாவிற்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரண்ட லட்ச கணக்கான தொண்டர்களால் மெரினா பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மெரினா பகுதியில் போக்குவரத்தை மாற்றி அமைத்தனர் சென்னை காவல்துறையினர்.

மெரினாவில் 50,422 சதுர அடியில் ரூ.80 கோடி மதிப்பீட்டில் பீனிக்ஸ் பறவை வடிவில் ஜெயலலிதா நினைவிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நினைவிடத்தின் முகப்பில் “மக்களால் நான்… மக்களுக்காக நான்” என்ற ஜெயலலிதாவின் பேமஸ் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடம் அருகிலேயே ஜெயலலிதாவின் நினைவிடமும் அமைக்கப்பட்டுள்ளது. 15 மீ. உயரம், 30.5மீ. நீளம், 43மீ. அகலத்தில் அமைந்துள்ளது நினைவிடம். 2018ம் ஆண்டு மே 7ஆம் தேதி அடிக்கல் நாட்டபட்டு பணிகள் நடந்து வந்தன.

Trending

Exit mobile version