தமிழ்நாடு

தமிழினத்தை கொன்று குவித்துவிட்டு ‘நான் தமிழன்’ என்பதா? ராகுல் காந்திக்கு ஜெயகுமார் பதிலடி!

Published

on

தமிழ் இனத்தை கொன்று குவிக்க உதவியாக இருந்துவிட்டு தற்போது நான் தமிழன் என்று சொல்வதா என ராகுல் காந்திக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று பாராளுமன்றத்தில் தமிழர்கள் குறித்தும் தமிழ்நாடு முழுதும் ஆவேசமாக ராகுல் காந்தி பேசினார் என்பதும் குறிப்பாக தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் பாஜக ஆட்சி செய்ய முடியாது என்று சவால் விடுத்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ராகுல் காந்தி ஆவேசமாக பேசிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது நானும் தமிழன் தான் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழ் இனத்தை கொன்று விட்டு தமிழன் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் என்று ராகுல் காந்தியின் பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: திமுக மீது உள்ள அதிருப்தியை திசை திருப்பவே சமூகநீதி கூட்டமைப்பு என்ற உத்தியை முதல்வர் ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார் என்றும் ஊழல் குற்றச்சாட்டு உள்ள பாதி அமைச்சர்கள் விரைவில் கம்பி எண்ணுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

வரும் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும் என்று கூறிய ஜெயக்குமார், தமிழ் இனத்தை கொன்று குவித்துவிட்டு தமிழன் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் என்றும் ராஜீவ்காந்தி குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.

மேலும் தேர்தல் காலத்தில் மட்டும் தமிழ் ஈழம் மற்றும் சமூக நீதி குறித்து பேச திமுகவிற்கு தகுதி இல்லை என்றும் சமூகநீதியை அதிமுக பாதுகாத்து வைத்திருப்பதாகவும் இட ஒதுக்கீட்டை பொருத்தவரை சமூக நீதியை காத்தவர் ஜெயலலிதா என்றும் அவர் கூறினார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version