தமிழ்நாடு

‘சார்பாட்டா பரம்பரை’ இயக்குனர் ரஞ்சித்துக்கு ஜெயகுமார் கண்டனம்!

Published

on

பா ரஞ்சித் இயக்கிய ‘சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் திமுகவின் பிரச்சார படம் என்றும் குத்துசண்டை வீரர்களுக்கும் எம்ஜிஆருக்கும் சம்பந்தமே இல்லாதது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சார்பாட்டா பரம்பரை திரைப்படம் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் திமுக தலைவர் மற்றும் திமுக சம்பந்தப்பட்ட காட்சிகள் சில இருக்கும். குறிப்பாக எமர்ஜென்சியை எதிர்த்து திமுக தலைவர் போராட்டம் நடத்தியது, எமர்ஜென்சியால் திமுகவினர் பட்ட கஷ்டங்கள் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும்.

அதேபோல் குத்துச்சண்டை வீரர்களுக்கு திமுக பிரமுகர்கள் வாழ்த்து தெரிவிப்பது, ஆதரவு தெரிவிப்பது ஆகிய காட்சிகளும் இருக்கும். ஆனால் உண்மையில் குத்துச்சண்டை வீரர்களுக்கு ஊக்கம் கொடுத்தவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் என்பது வரலாறு.

அந்த வரலாற்றை மறைத்து தங்களுக்கு சாதகமாக உள்ள காட்சிகளை மட்டும் பதிவு செய்திருப்பதாக ஏற்கனவே இரஞ்சித் மீது ஒரு சிலர் விமர்சனம் செய்துள்ளனர். இந்த விமர்சனத்தை அமைச்சர் ஜெயக்குமார் தற்போது உறுதி செய்து உள்ளார்.

அவர் இந்த படம் குறித்து கூறிய போது ‘சார்பாட்டா பரம்பரை திரைப்படத்தில் எம்ஜிஆருக்கும் விளையாட்டுத் துறைக்கும் தொடர்பில்லாதது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் முழுக்க முழுக்க திமுகவின் பிரச்சார படமாகவே ‘சார்பாட்டா பரம்பரை படம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version