தமிழ்நாடு

ஒற்றை தலைமை விவகாரத்தில் பாஜக தலையீடா? ஜெயகுமார் பேட்டி

Published

on

அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரத்தில் பாஜக தலையிட உள்ளதா என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றைத் தலைவலி பிரச்சினை தீவிரமாக இருந்து வருகிறது என்பதும் பொதுச் செயலாளர் என்ற ஒற்றை தலைமையை பிடிக்க எடப்பாடி பழனிசாமி தீவிரமாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் ஒற்றை தலைமை பிரச்சனையை சுமூகமாக்க ஓபிஎஸ் முயற்சித்து வருகிறார் என்பதும் இது குறித்து அவர் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தின் மனு கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பாஜக பிரமுகர்கள் அவரும் அவர் இது குறித்து ஆலோசனை செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒற்றை தலைமை விவகாரத்தில் பாஜக தலையீடு இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒற்றை தலைமை விவகாரத்தில் இதுவரை பாஜகவின் தலையீடு எதுவும் இல்லை என்றும் அப்படியே இருந்தாலும் அதை ஏற்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் பொதுக் குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை தலைமை பதவியை ஏற்பார் என்றும் அதை தடுக்க யாராலும் முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version