சினிமா செய்திகள்

சார்பட்டா பரம்பரைக்கு எதிராக வீடியோ வெளியிட்ட Ex அமைச்சர் ஜெயக்குமார்!

Published

on

ஆர்யா நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் அமேசான் பிரைம் தளத்தில் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை.

குத்துச் சண்டையை மையமாக வட சென்னை பின்புலத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு பல தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து உள்ளனர். இந்த திரைப்படத்தில் அதிமுகவுக்கு எதிராகவும், அதன் முன்னாள் பொதுச் செயலாளரான தமிழ்த் திரையுலகின் சூப்பர்ஸ்டார் எம்.ஜி.ஆருக்கு எதிராகவும் சில காட்சிகள் இருந்ததாக சர்ச்சை கிளம்பியது.

குறிப்பாக 1970 அவசரநிலை காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர், எமர்ஜென்சியை ஆதரித்துப் பாதை யாத்திரை மேற்கொண்டது வரலாறு. அந்த காலக்கட்டத்திலேயே இது பெரிதும் விமர்சிக்கப்பட்டது. அந்த வரலாற்றை சார்பட்டா பரம்பரையில் பதிவு செய்துள்ளது தான் அதிமுகவினரின் கொந்தளிப்புக்கு காரணமாக மாறியுள்ளது.

இது குறித்து தன் எதிர்ப்பையும் கண்டனங்களையும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சில நாட்களுக்கு முன்னால் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் அவர், #சார்பட்டாபரம்பரை என்கிற ஹாஷ்டேக்கின் மூலம், ‘எங்க வாத்தியார் எம்ஜிஆர், அவர் சிஷ்யன் நாங்க’ என்று பதிவிட்டுள்ளார்.

Trending

Exit mobile version