தமிழ்நாடு

ஜெயக்குமார் ஜாமின் மனுவை விசாரிக்க மறுப்பு? உயர்நீதிமன்றம் அதிரடி

Published

on

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன் ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஏற்கனவே ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ஜாமீன் கேட்டு ஜெயக்குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு இன்று தாக்கல் செய்யப்பட்டது.

திமுக தொண்டர் அரை நிர்வாணமாக்கி தாக்கிய வழக்கில் கடந்த 20 ஆம் தேதி ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில்இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வேண்டுமென கேட்டு ஜெயக்குமார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நாளைய வழக்குகளுக்கான பட்டியல் தயாராகி விட்டதால் ஜெயக்குமார் ஜாமீன் மனு வழக்கை வரும் வியாழக்கிழமை பட்டியலிடப்படும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது .

சாலை மறியல் செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே ஜெயக்குமாருக்கு ஜாமீன் கிடைத்துள்ள நிலையில் இன்னும் இரண்டு வழக்குகளில் அவர் ஜாமீன் பெற்றால் மட்டுமே சிறையில் இருந்து விடுதலை பெற்று முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version