இந்தியா

விரைவில் மோசமான நாட்களை சந்திக்க போகிறீர்கள்: ஐஸ்வர்யா ராய் மாமியார் பாராளுமன்றத்தில் எச்சரிக்கை!

Published

on

விரைவில் மோசமான நாட்களை சந்திக்கப் போகிறீர்கள் என பாஜக அரசுக்கு சமாஜ்வாதி கட்சி எம்பியும் நடிகை ஐஸ்வர்யா ராயின் மாமியாருமான ஜெயா பச்சன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை ஐஸ்வர்யா ராய் பெயர் பனாமா பேப்பர் பட்டியலில் இருந்ததை அடுத்து அவரை விசாரணைக்கு வரவேண்டும் என அமலாக்கத் துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர் என்பதும் இந்த சம்மனை ஏற்று நடிகை ஐஸ்வர்யாராய் நேற்று டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து ஐஸ்வர்யா ராயிடம் 5 மணி நேரம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை செய்ததாகவும் தன்னுடைய வரவு செலவு கணக்கு முழுவதையும் ஐஸ்வர்யா ராய் விளக்கமாக அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் நேற்று பாராளுமன்றத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவரும் ஐஸ்வர்யா ராய் மாமியாருமான ஜெயா பச்சன் பேசியபோது ’விரைவில் மோசமான நாட்களை சந்திக்கப் போகிறீர்கள் என கடுமையாக விமர்சித்தார்.

வெளி நாடுகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்தது தொடர்பாக பனாமா பேப்பர் வெளியிட்ட ஆவணங்களின் அடிப்படையில் ஐஸ்வர்யாவிடம் பலமணிநேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு ஜெயா பச்சன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தன்னை தனிப்பட்ட முறையில் பாஜகவினர் தரக்குறைவாக விமர்சனம் செய்வதாகவும் விமர்சனம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் ஜெயாபச்சன் கோரிக்கை விடுத்தார். ஜெயா பச்சனின் ஆவேசமான இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version