சினிமா

திட்டமிட்டபடி வெளியாகும் ‘ஜவான்’!

Published

on

நடிகர் ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாக இருக்கிறது.

’ராஜா ராணி’, ‘தெறி’ உள்ளிட்டப் படங்களை இயக்கிய அட்லி பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘ஜவான்’. ஷாருக்கான், நயன்தாரா, விஜய்சேதுபதி உள்ளிட்டப் பலர் இதில் நடித்துள்ளனர். படம் குறித்தான டைட்டில் டீசர் வெளியானபோதே இந்த வரும் ஜூன் மாதம் 2ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

, படப்பிடிப்பு முடிவடையவும் என்பதால், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிவடைய தாமதாமகும் இதனால் பட வெளியீடு தள்ளிப்போகலாம் எனத் தகவல் வெளியானது. ஆனால், கடந்த வியாழன் அன்றே படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் படம் திட்டமிட்டபடி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

டப்பிடிப்பின் போதே, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் நடந்திருப்பதால் படத்தை சொன்னபடி வெளியிடுவதில் எந்தவிதமான சிக்கலும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில், ஷாருக்கானின் ‘பதான்’ வெளியாகி ஆயிரம் கோடிக்கும் அதிக வசூலைப் பெற்றிருப்பதால் அட்லியின் ‘ஜவான்’ படத்திற்கும் எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version