சினிமா செய்திகள்

‘ஜவான்’ படமும் காப்பியா? அட்லியை கலாய்க்கும் நெட்டிசன்கள்

Published

on

பிரபல இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜவான்’. இந்த படத்தின் டீசர் நேற்று வெளியான நிலையில் இந்த டீசர் எந்த படத்தின் காப்பி என்று நெட்டிசன்கள் ஆய்வு செய்ய தொடங்கிவிட்டதாக தெரிகிறது.

அட்லி படம் என்றாலே பொதுவாக ஏதாவது ஒரு படத்தில் இருந்து காப்பி அடித்து எடுக்கப்பட்டதாக தான் இருக்கும் என ஆரம்ப முதலே கிண்டலடிக்க பட்டு வருகிறது. அவரது ராஜா ராணி படம் மவுனராகம் படத்தின் காப்பி என்றும், தெறி திரைப்படம் சத்ரியன் படத்தின் காப்பி என்றும், மெர்சல் திரைப்படம் அபூர்வ சகோதரர்கள் படத்தின் காப்பி என்று பிகில் திரைப்படமும் பாலிவுட் படம் ஒன்றின் காப்பி என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ‘ஜவான்’ படத்தை அவர் எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று வெளியான டீசரை வைத்து இந்த படமும் ஒரு ஹாலிவுட் படத்தின் காப்பி என்று நெட்டிசன்கள் கண்டுபிடித்துவிட்டனர். அந்த படத்தின் புகைப்படத்தையும் ‘ஜவான்’ படத்தின் புகைப் படத்தையும் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் பதிவு செய்து கிண்டலடித்து வருகின்றனர்.

காப்பி அடிக்காமல் அட்லிக்கு படம் எடுக்கவே தெரியாதா என்பது போன்ற கமெண்ட்ஸ் அதிகமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் ‘ஜவான்’ படம் வெளிவந்தால் மட்டுமே அந்த குறிப்பிட்ட ஹாலிவுட் படத்தின் காப்பியா அல்லது அட்லீ சொந்த கதையா என்பது தெரியவரும் என்று கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version