கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த 3வது இந்திய கிரிக்கெட் வீரர்!

Published

on

இந்தியா – மேற்கிந்திய நாடுகளுக்கான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா ஹாட்ரிக் விக்கெட் எடுத்து புதிய சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளார்.

25 வயதான பும்ரா டேரன் பிராவோ, ஷமர் ப்ரூக்ஸ் மற்றும் ரோஸ்டன் சேஸ் உள்ளிட்டவர்களின் விக்கெட்களை அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழக்கச் செய்து, இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் திகைக்க வைத்தார்.

மேலும் இந்த மூன்று விக்கெட்களை எடுத்ததால், இந்திய கிரிக்கெட் வீரர்களில் டெஸ்ட் போட்டிகளில் மூன்றாவதாக ஹாட்ரிக் விக்கெட் எடுத்த பெருமையை பும்ரா பெற்றுள்ளார்.

முன்னதாக 2001-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் சிங் ஹாட்ரிக் விக்கெட்களையும், 2006-ம் ஆண்டு பாகிஸ்தான் எதிரான டெஸ்ட் போட்டியில் இர்ஃபான் பதான் ஹார்ட்ரிக் விக்கெட்களையும் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version