தமிழ்நாடு

தங்கம் போல் உயரும் மல்லிகைப்பூ விலை.. ஒரு கிலோ ரூ.5,000?

Published

on

கடந்த சில நாட்களாக மல்லிகைப்பூ விலை அதிகரித்து கொண்டுவருவது பொதுமக்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்று மல்லிகைப்பூ விலை கிலோ ரூ.5000 என விற்பனையாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக மதுரை மல்லி தமிழகம் முழுவதும் பிரபலம் என்பதாலும் இந்த மல்லியின் வாசத்திற்காகவே பலர் வாங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கோடை காலங்களில் மல்லிகை வரத்து அதிகம் இருப்பதால் கிலோ ரூபாய் 300 முதல் 500 வரை விற்பனையாகும் என்பதும் தெரிந்ததே.

ஆனால் அதே நேரத்தில் பனிக்காலத்தில் மல்லிகைப்பூ வரத்து மிகவும் குறைவாக இருக்கும் என்பதால் 1,000 முதல் 2,000 ரூபாய் வரை விற்பனையாகும். கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ 2 ஆயிரம் என மதுரை மல்லி விற்பனையாகிக் கொண்டிருந்த நிலையில் இன்று தேனி திண்டுக்கல் போன்ற இடங்களில் கிலோ ரூபாய் 5000 என விற்பனையாகி வருவதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரியில் உள்ள பூக்கள் சந்தையில் நேற்று 1500 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை பூ இன்று கிலோ ரூ.2000 என விற்பனை ஆவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் மதுரையில் 3000 ரூபாய் எனவும், தேனி மற்றும் திண்டுக்கல் பகுதியில் 5 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

மல்லிகைப்பூ விலை இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் நல்ல லாபம் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version