உலகம்

சீனாவில் செய்துள்ள முதலீடுகளைத் தாய் நாட்டுக்குத் திரும்பப் பணம் கொடுக்கும் ஜப்பான் அரசு!

Published

on

சீனாவில், ஜப்பான் நிறுவனங்கள் செய்துள்ள முதலீடுகளை, தாய் நாடு அல்லது தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு மாற்ற மானியம் கொடுப்பதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. இப்படிச் செய்வதன் மூலம் உற்பத்தித் துறையில் சீனாவை சார்ந்து இருப்பது குறையும் என்று ஜப்பான் நம்புகிறது.

ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஜப்பானைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஷார்ப், ஐரிஸ் ஓயாமா உள்ளிட்ட 57 நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறினால் அவர்களுக்கு 57.4 மில்லியன் யென் வரை ஜப்பான் அரசு மானியம் வழங்கும் என்று தெரிவித்துள்ளது.

சீனாவைச் சார்ந்து இருப்பதைத் தவிர்க்க ஜப்பான் அரசு 70 பில்லியன் யென் வரை செலவு செய்ய உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இதே போன்ற முடிவை ஜப்பான் மட்டும் அல்லாமல் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளும் முடிவு செய்துள்ளன. இந்திய அரசு சீனாவின் 59 செயலிகளுக்குத் தடை விதித்துள்ளது.

ஜப்பானின் இந்த திடீர் முடிவுக்கு கொரோனா வைரஸ் மட்டும் அல்லாமல் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் எல்லைகள் மற்றும் தீவுகளில் சீனா செய்து வரும் முறையற்ற உரிமை கோரல்களே காரணம் என்று கூறப்படுகிறது. அண்மையில் சீனாவின் எல்லை உரிமை கோரல்களைத் தடுக்கும் விதமாக அமெரிக்கா தங்களது கப்பல்களை ஆசியத் தீவுகளில் நிறுத்த தொடங்கியுள்ளது.

ஜப்பான் மற்றும் பிற நாடுகளின் இந்த முயற்சி வெற்றிபெற்றால் உற்பத்தித் துறையில் சீனாவுக்கு உள்ள ஆதிக்கம் பெரும் அளவில் சரியும். ஜாப்பான் – சீனா இடையில் உள்ள வர்த்தக உறவு பெரும் அளவில் பாதிப்படையும்.

Trending

Exit mobile version