உலகம்

அதிகமாகும் கொரோனா தகவல்: ஒலிம்பிக் ரத்தாகும் என தகவல்!

Published

on

ஜப்பானில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகிக் கொண்டே வருவதால் ஒலிம்பிக் போட்டி ரத்தாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளிவந்து கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை ஒலிம்பிக் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக பாதுகாப்புடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது என்பதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாமல் வீரர்களை அழைத்துவர தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் போட்டி துவங்குவதற்கு முன்பே வீரர்கள் வீராங்கனைகள் உள்பட 10 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமின்றி ஜப்பானில் தற்போது மூன்றாவது அலை தீவிரமாக பரவி வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இதனை அடுத்து ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என ஜப்பானிய அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பல நாடுகளிலிருந்து வீரர்கள் வீராங்கனைகள் பயிற்சியாளர்கள் உள்பட பலர் ஜப்பானுக்கு வருவதால் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்தனர்.

இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகமாகி வரும் நிலையில் ஜப்பானில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டி ரத்தாகலாம் என தகவல் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version