வணிகம்
ஜனவரி மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1,10,828 கோடி!
![GST - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/07/GST.jpg)
சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி ஜனவரி மாதம் ரூ.1,10,828 கோடி வசூலாகியுள்ளது.
அதில் மத்திய ஜிஎஸ்டி ரூ. 20,944 கோடி, மாநில ஜிஎஸ்டி 28,224 கோடி, ஒருங்கிணைக்கப்பட்ட ஜிஎஸ்டி 53,013 கோடி மற்றும் செஸ் 8,637 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஜிஎஸ்டியில் ஜனவரி 2020-ம் ஆண்டு வசூல் செய்யப்பட்டுள்ளது ரூ.1,10,828 கோடியே அதிகபட்ச ஜிஎஸ்டி வசூல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.