சினிமா செய்திகள்

தளபதி 65’ படத்தின் நடன இயக்குனர் இவர்தான்: செம ஆட்டம் காத்திருக்கு!

Published

on

தளபதி விஜய், பூஜா ஹெக்டே உள்பட பலர் நடிக்க இருக்கும் ’தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஜானி மாஸ்டர் நடன இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்தின் பாடல் ஒன்றுக்கு ரிகர்சல் மிக விரைவில் தொடங்க இருப்பதாகவும் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாகவும் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இந்த தகவலை தற்போது விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றனர்.

பல சூப்பர் ஹிட் படங்களுக்கு ஜானி மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பதும், குறிப்பாக உலகம் முழுவதும் ஹிட்டான புட்டபொமா பாடலுக்கு இவர்தான் நடன இயக்குனராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையில் ஜானி மாஸ்டர் நடன இயக்கத்தில் விஜய் பூஜா ஹெக்டே ஆடும் நடனத்தை திரையில் காண விஜய் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/AlwaysJani/status/1376529743202320387

seithichurul

Trending

Exit mobile version