இந்தியா

கொரோனாவை விரட்ட தொடங்கியது சுய ஊரடங்கு உத்தரவு!

Published

on

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, பிரதமர் மோடி அறிவித்த சுய ஊரடங்கு உத்தரவு தொடங்கியுள்ளது.

மக்கள் வெளியில் செல்வதைத் தடுக்கும் நோக்கில், பேருந்துகள், ஆட்டோக்கள், லாரிகள், டாக்சி, வாடகை வாகனங்கள் இன்று காலை முதல் 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஓடாது.

கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்டவையும் மூடியே இருக்கும். ஆவின் பாலகங்கள் மூலமாக, பால் மட்டும் நாள் முழுவதும் கிடைக்கும்.

மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், காவல் துறையினர் மற்றும் பொது சுகாதாரம், வருவாய்த் துறையினர் உள்ளிட்டோர் பொதுநலன் கருதி தொடர்ந்து பணிக்கு சென்று வருவார்கள்.

அரசின் இந்த ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களுக்கு 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version