தமிழ்நாடு

வாக்களிக்கும்போது இது இரண்டையும் பார்க்க வேண்டாம்: ஜக்கி வாசுதேவ்

Published

on

வாக்களிக்கும் போது ஜாதி, மதம் ஆகிய இரண்டையும் பார்க்க வேண்டாம் என ஜக்கி வாசுதேவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கோவை அருகே உள்ள வாக்குச் சாவடி ஒன்றில் வாக்களித்தபின் ஜக்கி வாசுதேவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தேர்தல் என்பது ஒரு வெறும் நிகழ்ச்சி அல்ல, மனித குல வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வு. ஒவ்வொரு மனிதனுக்கும் வாக்குரிமை என்பது மிகவும் மரியாதையான ஒன்றாகும். நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் உங்களுக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டும் தான் கிடைக்கும். அதனால் இந்த ஜனநாயகத்தில் நாம் அனைவரும் சமம் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

ஜாதி மதம் ஆகிய இரண்டையும் பார்த்து வாக்களிக்க வேண்டாம். நம் மாநிலத்திற்கு யார் முன்னேற்றம் கொண்டு வருவார்கள்? யார் வெற்றிகரமாக தமிழ்நாட்டில் நடத்தி செல்வார்கள்? என்பதை அறிந்து உங்களுக்கு யார் மீது நம்பிக்கை இருக்கிறதோ அவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று கூறினார். ஜக்கி வாசுதேவின் இந்த பேட்டி பரபரப்பாகிவிட்டது.

 

 

 

seithichurul

Trending

Exit mobile version