தமிழ்நாடு

தமிழக முதல்வரின் திட்டத்திற்கு ஜக்கி வாசுதேவ் பாராட்டு!

Published

on

தமிழக முதல்வரின் திட்டத்திற்கு ஜக்கிவாசுதேவ் பாராட்டு தெரிவித்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின்போது திமுகவினர் பலர் ஜக்கி வாசுதேவ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தனர் என்பதும் குறிப்பாக யானைகள் வழித்தடத்தில் ஜக்கிவாசுதேவ் ஆலயத்தை அமைத்து உள்ளார் என்றும் குற்றம் சாட்டியிருந்தனர்.

திமுக ஆட்சி அமைந்த பிறகும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் ஜக்கி வாசுதேவ் மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தினார் என்பதும் அதன் பின்னர் திடீரென தனது கருத்தை வாபஸ் பெற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் யானைகள் வழித்தடத்தில் ஜக்கி வாசுதேவின் கோவில் அமையவில்லை என சமீபத்தில் தமிழக அரசின் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழக அரசின் ’பசுமை தமிழ்நாடு’ என்ற திட்டத்தை ஜக்கிவாசுதேவ் பாராட்டியுள்ளார். தமிழ்நாட்டின் பசுமை பரப்பை அதிகரிப்பதற்காக ’பசுமை தமிழ்நாடு’ என்னும் திட்டத்தை தொடங்கி அதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதற்கு தமிழ்நாடு அரசுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனத்தின் சார்பில் பாராட்டு தெரிவித்து கொள்வதாகஅவர் குறிப்பிட்டுள்ளார்.
மண்வளத்தை மீட்பதற்கு மாநிலத்தில் செழிப்பையும் நல்வாழ்வையும் அதிகரிப்பதற்கும் இந்த பசுமை தமிழ்நாடு திட்டம் மிகவும் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version